ஈரோடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி நடவடிக்கையால் 4 தொழிற்சாலைகளை மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது .
March 24, 2022
1
ஈரோடு, பவானி, பள்ளிபாளையம், குமாரபாளையம், கரூர் பகுதிகளில் அமைந்துள்ள
சாய/சலவை மற்றும் பிரிண்டிங் தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர்
வெளியேற்றப்படுவதாக தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து புகார் வந்ததின் பேரில், தமிழ்நாடு
மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர், சென்னை அவர்களின் உத்தரவின்படி கண்காணிப்புக்குழு
அமைக்கப்பட்டு திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. திடீர் ஆய்வுகளில், ஈரோடு வட்டம்,
சூரம்பட்டிவலசு, வெட்டுக்காட்டுவலசு மற்றும் பி.பெ.௮க்ரஹாரம் ஆகிய பகுதிகளில்
சட்டத்திற்கு புறம்பாக சாய மற்றும் சலவை ஆலைகள் அதன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை
முறையாக இயக்காமல் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் அருகாமையில் உள்ள
சாக்கடைக் கால்வாயில் சாய/சலவை கழிவுநீரை வெளியேற்றிய 4 தொழிற்சாலைகள்
கண்டறியப்பட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகம் வாயிலாக
தொழிற்சாலைகளை மூடுவதற்கான உத்தரவும், மின் இணைப்பை துண்டிக்க மின்சார
வாரியத்திற்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, மேற்கண்ட 4 தொழிற்சாலைகளின் மின்
இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
மேலும், சாயம், சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் பூஜ்யநிலைக் கழிவுநீர்
சுத்திகரிப்பு முறையை திறம்பட இயக்கி சுற்றுச்சூழலையும், நீர் நிலைகளையும் பாதுகாக்குமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறது. தொழிற்சாலைக் கழிவுநீரை நீர்நிலைகளில் வெளியேற்றும்
தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு மாசு
கட்டுப்பாடு வாரியத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளது என மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்
(தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்) அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது போன்ற நடவடிக்கைகள் தொடரட்டும்
ReplyDelete