கோபி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மகளிருக்கான இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
April 15, 2022
0
ஈரோடு மாவட்டம் கோபி அருகில் உள்ள அளுக்குளி சாய்பாபா கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மகளிருக்கான இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10 கிலோ, 20 கிலோ, 30 கிலோ ,40 கிலோ, 50 கிலோ என ஐந்து பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 60 பேர் கலந்து கொண்டனர்.
வெற்றி வாகை சூடியவர்களுக்கு ஓம் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பசுமை சித்தர், கோபி ரோட்டரி சங்க தலைவர் கார்த்திகேயன், சாய்பாபா கோவில் நிர்வாகி பன்னீர்செல்வம், ஆசிரியர் ஸ்ரீஹரி ஜப்பான் ஷிட்டோரியு ஈரோடு தலைமை பயிற்சியாளர் ஷிகான் செந்தில், ஆசிரியர் காந்தி, ஆசிரியர் பிரபு சங்கர் உட்பட 300 பேர் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம், கோப்பை பரிசளிக்கப்பட்டது.
Tags