நல்லமுத்து கம்பன் அறநிலைய குழு சார்பாக 59.ம் ஆண்டு கம்பர் விழா மற்றும் பேராசிரியர் செ.சு. பழனிசாமி திருவுருவப்பட திறப்பு விழா
July 25, 2022
0
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நல்லமுத்து கம்பன் அறநிலைய குழு சார்பாக 59.ம் ஆண்டு கம்பர் விழா மற்றும் பேராசிரியர் செ.சு. பழனிசாமி அவர்களின் திருவுருவப்பட திறப்பு விழாவும் நடைபெற்றது. இதில் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் திரு முத்துசாமி அவர்கள் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார். விழாவில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் குறிஞ்சி என். சிவகுமார், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என். நல்லசிவம், கோபி நகர மன்ற தலைவர் என்.ஆர். நாகராஜ், மக்கள் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், மனநல மருத்துவர் எஸ்.பி. குறிஞ்சிநாதன், கோபி கலை கல்லூரி பேராசிரியர்கள், நல்லமுத்து கம்பன் அறநிலைய குழுவினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.