பள்ளிபாளையம் பாஜக கட்சி சார்பில் 75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா ...
August 16, 2022
0
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பா.ஜ.க. சார்பில் 75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக காவேரி R.S. பஸ் நிலையத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை இருசக்கர வாகனத்தில் கட்சி நிர்வாகிகள் தேசிய கொடியினை ஏந்திக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதமாக அணிவகுத்து சென்றனர். இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் நாகராஜன், பள்ளிபாளையம் நகர தலைவர் அசோக், தெற்கு ஒன்றிய செயலாளர் சம்பத் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags