பள்ளிபாளையம் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு, அ.குமார் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
September 15, 2022
0
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக நகர அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் படத்திற்கு திமுக நகர கழக செயலாளர் அ.குமார் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இவ்விழாவில் திமுக நகர அவைத் தலைவர் ஜான் பாய், ஜிம் செல்வம், நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதிகள், நகர மன்ற உறுப்பினர்களான சசி (எ) சசிகுமார், வினோத் குமார் ஆகியோர் மற்றும் திமுக நகர நிர்வாகிகள், இளைஞர் அணி, தொழில் நுட்ப அணி, மகளிர் அணி, மாணவர் அணி, திமுக வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
Tags