அறிஞர் அண்ணா அவர்களின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் நலத்திட்ட உதவி, ரத்ததான முகாம், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வரும் நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு சனி சந்தை பகுதியில் அறிஞர் அண்ணா அவர்களின் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்விற்கு பள்ளிபாளையம் அதிமுக நகர செயலாளர் பி.எஸ்.வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் மின்சார துறை அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி கலந்து கொண்டு அதிமுக கொடியினை ஏற்றி அறிஞர் அண்ணா அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சேர்மன் எஸ்.செந்தில், நகர அம்மா பேரவை செயலாளர் டி கே சுப்பிரமணி, நகர துணை செயலாளர் ஜெய்கணேஷ், நகர பொருளாளர் சிவகுமார், ஆலாம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் R.செல்லதுரை, தலைவர் தனசேகர், துணைச் செயலாளர் சுரேஷ்குமார் , படைவீடு பேரூர் கழக செயலாளர் ஜெகநாதன், பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி மற்றும் மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், நகர மாணவரணி தலைவர் ஆடிட்டர் ராஜா, நகராட்சி கவுன்சிலர்களான ஜெயா, வைத்தி செந்தில், சம்பூர்ணம், பெரியார் நகர் சரவணன், சுரேஷ், சுஜாதா, மாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு சரவணன், சுரேஷ், ராஜ்குமார், ரங்கநாதன், ராஜா, மோகன், பாசறை வடிவேல், சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.. ✍️ நாமக்கல் மாவட்ட செய்தியாளர் சுந்தரம்.
பள்ளிபாளையத்தில் அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா அவர்களின் 114-வது வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்
September 15, 2022
0
Tags