தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் உள்ளாட்சிகள் சிறக்க!! மாதம் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் தூய்மை பணிகள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் ஒரு வருடம் தொடர்ந்து நடைபெறுகிறது. அதனை ஒட்டி பள்ளிபாளையம் நகராட்சியிலும் 19 வார்டில் (மாஸ் கிளினிங்) தீவிர தூய்மை பணிகள் நடைபெற்றது. இதில் நகர மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் துணைத் தலைவர் பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் கோபிநாத், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம், நகர மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நகராட்சி சார்பாக தூய்மை பணிகள் குறித்து விழிப்புணர்வு ...
September 11, 2022
0
Tags