Type Here to Get Search Results !

ஈரோடு இரயில் நிலையத்தில், சைல்டுலைன்-1098 குழந்தைகள் உதவி மையத்தின் சார்பாக விழிப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றது.

ஈரோடு இரயில் நிலையத்தில் அமைந்துள்ள சைல்டுலைன்-1098 குழந்தைகள் உதவி மையத்தின் சார்பாக குழந்தை தொடர் கல்வி, குழந்தை திருமணம் தடுப்பு, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் இரயில் நிலைய வளாக முகப்பு பகுதியில் நடைபெற்றது. 
 ரீடு - இரயில்வே குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெயராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி குழந்தைகள் சார்ந்த விழிப்புணர்வு, குழந்தைகள் கடத்தப்படுதல், மீட்பு பணிகள் குறித்து விளக்கமளித்தார். ஈரோடு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்திலிருந்து நன்னடத்தை அலுவலர் திரு. ராஜேந்திரன், ஈரோடு இரயில்நிலைய கூடுதல் மேலாளர் (வனிகம்), ஈரோடு இருப்புபாதை காவலர்கள், ரயில்வே பாதுபாப்பு படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஈரோடு வேளாலர் கல்லூரி சமூகநலத்துறை மாணவர்கள் வீதிநாடகத்தை  பொதுமக்கள் மத்தியில் சிறப்பாக நடத்தினர். நிகழ்சி ஏற்பாடுகளை ரீடு- இரயில்வே குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். 

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.