கலிங்கியம் ஊராட்சி நாகர்பாளையம் கிழக்கு கிளைக் கழக ஆற்றல்மிகு செயலாளர் NM திருக்குமார் அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில், கழக நிறுவனத் தலைவர் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பட்டு (17.10.1972)
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் உறுதியுடன் வளர்க்கப்பட்டு, புரட்சி தலைமகன் எடப்பாடியார் அவர்களால் காக்கப்படும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொள்கையிலிருந்து வழுவாது இன்றும் தொண்டர்களின் தலைமையிலேயே பொன்விழா ஆண்டை நிறைவு செய்து
51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாபெரும் மக்கள் இயக்கம். நாகர்பாளையம் 3வது வார்டு பகுதியில் ஈரோடு மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு. M அருள் இராமச்சந்திரா BA அவர்கள் கழக கொடியினை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார். மற்றும் கலிங்கியம் ஊராட்சி மன்றத் தலைவரும் அஇஅதிமுக கோபி மேற்கு ஒன்றிய இணைச் செயலாளருமான திருமதி T.கோகிலா அருள்இராமச்சந்திரா BCom அவர்கள்
புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உடன் 3 வது வார்டு கவுன்சிலரும் அஇஅதிமுக கோபி மேற்கு ஒன்றிய மகளிரணி துணை செயலாளருமான திருமதி T.பவளக்கொடி திருக்குமார் அவர்கள் மற்றும்
உடன் கலிங்கியம் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் V.K.இளங்கோ மற்றும் புதுவள்ளியாம் பாளையம் கிளைக் கழக செயலாளர் V.Nதரணிதரன் மற்றும் கோபி நகர 29வது வார்டு செயலாளர் திரு குணசேகரன் அவர்கள், எபிநேசர்,
சுந்தரமூர்த்தி,
பொன்னுசாமி மற்றும் இரத்தத்தின் ரத்தமான கழக உடன்பிறப்புகள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.