அதிமுக - வின் 51 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பள்ளிபாளையம் நகர, ஒன்றிய, பேரூர் கழகங்களின் சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் மூத்த நிர்வாகிகளும் கழகத்தின் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர். முன்னாள் நகர மன்ற தலைவர் மற்றும் பள்ளிபாளையம் நகரக் கழகச் செயலாளர் பி எஸ் வெள்ளிங்கிரி, மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர் சேர்மேன் s செந்தில் ஆகியோர் எம்ஜிஆர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர். அம்மா பேரவை செயலாளர் டி கே சுப்பிரமணி கழகக் கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். நகர பொருளாளர் சிவகுமார் மேலும் ஆலம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் செல்லதுரை, படைவீடு பேரூர் கழக செயலாளர் ஜெகநாதன், நகர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் வாசு தேவன், நகர மாணவரணி தலைவர் ஆடிட்டர் ராஜா, ஒன்றிய துணைச் செயலாளர் எஸ் சீனிவாசன், பேரூர் துணை கழக செயலாளர் சுரேஷ், நகர மன்ற கவுன்சிலர்கள் ஜெயாவைத்தி, செந்தில், சுஜாதா மாரிமுத்து, சம்பூரணம், சுரேஷ், சரவணன் மற்றும் பாசறை வடிவேலு ஐடி விங் சரவணன், சுரேஷ், ராஜ்குமார், மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். நகர துணை செயலாளர் ஜெய்கணேஷ் நன்றி தெரிவித்தார். ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்கள், பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அதிமுக- வின் 51 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பள்ளிபாளையம் நகர, ஒன்றிய, பேரூர் கலகங்களின் சார்பில் விழா
October 17, 2022
0
Tags