பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் 85வது பிறந்தநாள் விழா 25.07.2023 இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மேற்கு மாவட்ட பள்ளிபாளையம் பாட்டாளி மக்கள் கட்சியில் சார்பில் அக்ரஹாரம் பகுதியில் உள்ள சித்தி பெற்ற விஸ்வேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் சந்தைப்பேட்டை ஓங்காளியம்மன் கோவில் வீதி, பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம், ஆவரங்காடு மூன்றாவது கிராஸ் ஆகிய பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட் சியின் கொடியேற்று விழா மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பால், பன் போன்ற உணவுப் பொருட்கள் அளிக்கப்பட்டது.
பிறந்தநாள் விழாவின் முக்கிய நிகழ்வாக, பிறந்த பெண் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்புச் செயலாளர் உமாசங்கர் தலைமை வகித்தார்.
பள்ளிபாளையம் நகர செயலாளர் உதயகுமார் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன், மாவட்ட செயலாளர் சுதாகர், மாவட்ட தலைவர் மூர்த்தி, மாவட்ட பொருளாளர் சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.