07.08.2023 நேற்று தமிழக முழுவதும் நெசவாளர் தினம் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருமண மண்டபத்தில் தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கம் சார்பில் நெசவாளர் தினம் என்பது கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து நெசவாளர்களுடைய பெருமைகள், சாதனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டு சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பட்டு சேலை மற்றும் பட்டு வேஷ்டிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஈஷா மோகன், பள்ளிபாளையம் நகர தலைவர் சம்பத், பள்ளிபாளையம் நகர துணைத்தலைவர் தங்கராஜ், தங்கராஜன் மற்றும் பொருளாளர் சதாசிவம், செயலாளர் மாவட்ட பொருளாளர் வடிவேல், தொழிலதிபர்கள் தங்கவேல் செட்டியார், நாகராஜ், சண்முகசுந்தரம், ராஜாராம், சண்முகம், சங்கமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் தேவாங்கர் சமுதாயம் குறித்தும் நெசவாளர்களின் பெருமை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்வில் தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கம் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.