நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆலம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன கவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஐந்து குடிசை வீடுகள் தீ விபத்தில் எறிந்து சேதமாகியது.
இதனை அறிந்த முன்னாள் தமிழக மின்சார துறை அமைச்சரும் தற்போதைய குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக நாமக்கல் மாவட்ட கழக செயலாளருமான தங்கமணி இரண்டு நாட்கள் முழுவதும் அதிமுக சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கி வந்தார்.
இந்த நிலையில் 14.08.2023 இன்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் வேஷ்டி, சேலை, நிவாரண நிதி ஆகியவைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் செந்தில் மற்றும் பள்ளிபாளையம் முன்னாள் நகர் மன்ற தலைவரும் அதிமுக நகரச் செயலாளர் வெள்ளியங்கிரி, ஆலம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் செல்லதுரை, ஆலம்பாளையம் பேரூர் கழகத் துணைச் செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் பள்ளிபாளையம் நகர மன்ற உறுப்பினர்கள், ஆலாம்பாளையம் பேரூராட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.