தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
அவர்கள்
மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவங்கி வைத்ததை தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் அரச்சலூரிலுள்ள ஓடாநிலை சமுதாயக்கூடத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு, ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.
மேலும், மக்களின் மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் அப்பகுதியில் மக்களின் குறைகள் தீர்க்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கழக பேரூர் நிர்வாகிகள் உடனிருந்தனர்.