1. தமிழ்நாட்டில் உள்ள கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் அனைத்து நல வாரியங்களிலும் உறுப்பினராக உள்ளவர்களுக்கு வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு போனஸ் வழங்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
2. நவீன இந்தியாவில் பல தொழிற்சாலைகளை உருவாக்கி அதில் பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிஅவர்களின் குடும்பங்களை தமது குடும்பம் போல் பாவித்த இந்திய தொழிலதிபர் மறைந்த ஜே ஆர் டி டாட்டா அவர்களுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு கூட்டத்தினர் அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி.
3. சமீபத்தில் சாம்சங் தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்காக நீண்ட நாட்கள் போராடினார்கள். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு சாம்சங் நிர்வாகத்தை பேச்சு வார்த்தை மூலமாக தீர்வு காண செய்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது .மேலும் ஒற்றுமையாக போராடிய தொழிலாளர்களுக்கும் ஆதரவளித்த அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.