பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே ஆன D- பிரிவு ஆண்கள் கிரிக்கெட் போட்டிகள் 14/10/24 ல் தொடங்கி 18/10/24 வரை மொடக்குறிச்சி எழுமாத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. 22 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டிகளை கல்லூரி முதல்வர் முனைவர் எபிநேசர் துவங்கி வைத்தார்.
இந்த போட்டிகள் அனைத்தும் நாக்கவுட் முறையில் நடைபெற்றது. 18/10/24 அன்று போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், முதலாவது இடத்தினை அம்மன் கலை அறிவியல் கல்லூரி பெற்றது. இரண்டாவது இடத்தினை கோபி கலை அறிவியல் கல்லூரி அணியினர் பெற்றனர். மூன்றாவது இடத்தினை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி பெற்றனர். நான்காவது இடத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரியில் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கணினி துறை உதவி பேராசிரியர் முனைவர் தர்மலிங்கம் கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கினார். மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் போ. பாலமுருகன் இப்போட்டிகளை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து நடத்தினார்.