ஈரோடு எக்ஸலண்ட் அரிமா சங்கம் சார்பில் ஈரோடு எல்லோ சன் சிட்டி அரிமா சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் துவக்க விழா 19.10.2024 சனிக்கிழமை ஈரோடு சென்ட்ரல் லயன்ஸ் ஹாலில் நடைபெற்றது.
ஈரோடு எக்ஸலண்ட் அரிமா சங்க தலைவர் அரிமா. A.மோகன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆளுநர் அரிமா N.P.செந்தில் குமார் அவர்கள் புதிய சங்கத்தை துவக்கி வைத்தார். முன்னாள் பன்னாட்டு இயக்குநர் அரிமா Er.K. தனபாலன் அவர்கள் புதிய நிர்வாக குழுவினை பதவியில் அமர்த்தி சிறப்புரையாற்றினார். முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா பூர்ணிமா டன்னா அவர்கள் புதிய உறுப்பினர்களை இணைத்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். முதலாம் துணை மாவட்ட ஆளுநர் அரிமா E.விஸ்வநாதன் அவர்கள் நமது பள்ளி திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக இரண்டாம் துணை மாவட்ட ஆளுநர் அரிமா P.பொன்னுசாமி அவர்கள் கலந்து கொண்டார்.
புதிய சங்க 2024-25 ஆண்டு சங்க பொறுப்பாளர்களாக, அரிமா ஜஹேரா தைசூன், அரிமா தைசூன் முனீர், அரிமா A. கமல் ராஜ், அரிமா P. ஹரிஹரன், அரிமா P. பானுப்பிரியா, அரிமா Er.N. பாலாஜி, அரிமா T. மகேஸ்வரி, அரிமா J. ஷகிலா, அரிமா M. தேவகி, அரிமா A. ரேணுகா தேவி, அரிமா R. ரேவதி, அரிமா ரேவதி சரவணன், அரிமா R. பாரதி பிரியா, அரிமா N. பழனிசாமி, அரிமா E.தனஞ்ஜெயன், அரிமா C. தேன்மொழி, அரிமா P. சுசீலா , அரிமா V.S. ராஜராஜேஸ்வரி, அரிமா S. சுகன்யா, அரிமா P. காந்தி @ இந்து, அரிமா P. மாலதி ஹரிஹரன், அரிமா V.D. பிரபு ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சங்க வழிகாட்டுநர்களாக முன்னாள் தலைவர் அரிமா A.S. காஜா மைதீன், முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா பூர்ணிமா டன்னா ஆகியோர் மற்றும் சங்க விரிவாக்குநர்ளாக முன்னாள் தலைவர் அரிமா J.A. ஜாகிர் உசேன், முன்னாள் தலைவர் அரிமா P.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், பட்டையத் தலைவர் அரிமா கௌரி கணேசன் அவர்கள் விழா ஒருங்கிணைப்பாளராக செயலாற்றினார்.
இந்நிகழ்வில், மண்டல தலைவர் அரிமா சந்திரா ஈஸ்வரன், வட்டார தலைவர் அரிமா K.C.தங்கமுத்து, கண்ணொளி திட்ட மாவட்ட தலைவர் அரிமா Dr.C.மோதிலால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் இந்நிகழ்வில், தலைவர் அரிமா A. மோகன், செயலர் (நிர்வாகம்) அரிமா T.S.P. தாமோதரன் , செயலர் (சேவை) அரிமா A. இப்ராஹிம் சுஜாத், பொருளர் அரிமா E.N.முகமது உவைஸ் மற்றும் மாவட்ட முதன்மை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.