இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஈரோடு மாவட்டத்தில் 98-ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 2025 தேர்தல் செலவினம் தொடர்பாக தேர்தல் செலவின பார்வையாளராக தினேஷ் குமார் ஜாங்கிட் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் செலவின பார்வையாளர் அவர்களால் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக செலவின கணக்குகள் மற்றும் ஒத்திசைவு கூட்டமானது கீழ்க்கண்ட நாட்களில் நடைபெறவுள்ளது.
எனவே மேற்கண்ட நாட்களில் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளரால் (Expenditure Observer) நடத்தப்படும் ஆய்வுக் கூட்டங்களில் 98- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர் மேற்கண்ட நாட்களில் தேர்தல் செலவின கணக்குகள், வங்கி கணக்கு புத்தகம், அன்றாட செலவின கணக்கு பதிவேடுகள் ஆகியவற்றை தகுந்த முறையில் பூர்த்தி செய்து மேற்கண்ட கூட்டங்களில் தவறாது கலந்து கொள்ள ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தெரிவித்துள்ளார்.