ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் 05.02.2025 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஈரோட்டில் நடைபெற்று வரும் பல்வேறு தேர்தல் பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதைத்தொடர்ந்து, முறையான வாகன சோதனையை உறுதி செய்வதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஈரோடு மாநகராட்சி மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ் .என் அவர்கள் 19.01.2025 இன்று, ஈரோடு காளை மாட்டு சிலை பகுதியில் நடைபெற்று வரும் வாகன பரிசோதனைகள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.