இந்தியா கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் அவர்களை ஆதரித்து கோட்டை பகுதி 35 -வது வார்டில் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் கூட்டணி தோழமைக் கட்சித் தலைவர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
உடன், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கழக மாநில, மாவட்ட, மாநகர பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணியினர் கலந்து கொண்டனர்.
இதில், கோட்டை பகுதி கழக செயலாளர் ராமச்சந்திரன், கவுன்சிலர் புவனேஸ்வரி, வட்ட கழக செயலாளர் பிரகாஷ், கவுன்சிலர் பழனியப்பா செந்தில் ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வாக்கு சேகரிக்க வந்திருந்த அமைச்சருக்கு கோட்டை பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.