கலிங்கியம் கிராமத்திற்கு உட்பட்ட சென்னியப்பா நகரில் ஸ்ரீ பொய்யேறி கருப்பராயன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் மிகப்பழமை வாய்ந்த கோயிலாகும். சென்னியப்பா நகரின் உள்ளே அமைந்துள்ள இக்கோயிலை சென்னியப்பா நகர் பொதுமக்கள் சிறப்பான முறையில் பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.
இந்தக் கோயிலில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ கன்னியாத்தா, ஸ்ரீ அண்ணமார் உள்ளிட்ட தெய்வங்களின் வருடாந்திர ஆடி மாத பொங்கல், கிடாய் வெட்டு மற்றும் பெரும்பூஜை திருவிழா ஆனது சென்னியப்பா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பொய்யேரி கருப்பராயன் கோயில் தர்மகர்த்தா கே. பி. செந்தில்குமார் தலைமையில் மற்றும் சென்னியப்பா நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சுப்பிரமணியம் முன்னிலையில் வானவேடிக்கையுடன், மேளதாளங்கள் முழுங்க வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது.
விழாவில், கலிங்கியம் பாரதி நகர், காந்தி நகர், காமதேனு நகர், சக்தி கார்டன் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ பொய்யேரி கருப்பராயன்னை வழிபட்டனர். நிகழ்ச்சியில் சென்னியப்பா நகர் பொதுமக்கள் சார்பாக 1000 -க்கும் மேற்பட்டோருக்கு கறி விருந்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது.