தமிழக அரசின் ஆணைக்கிணங்க, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் கோபி கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு இயக்கம் மூலம் "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" என்ற நோக்குடன் போதைப் பழக்கத்திற்கு எதிரான மாபெரும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.
இதில், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் எஸ்.சிவானந்தம், I.A.S., காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜி. சீனிவாசன், வருவாய் வட்டாட்சியர் ஈ. ஆர். சரவணன், நகராட்சி ஆணையாளர் திருமதி. டி. வி. சுபாக்ஷினி, கோட்டக் கலால் அலுவலர் திருமதி. எஸ். ஆசியா, கோபி கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் எம். தரணிதரன், முதல்வர் முனைவர். தெ. வேணுகோபால், துணை முதல்வர்கள் முனைவர் எம்.ராஜு மற்றும் முனைவர் என்.சக்திவேல், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், போதைப் பொருள் எதிர்ப்பு இயக்க உறுப்பினர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அனைவரும் காணொளி வாயிலாக, நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வுடன் இணைந்து அவரது தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.