Type Here to Get Search Results !

100 நாள் வேலைவாய்ப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றம்.....


ஜி ராம்ஜி என்று பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார் செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.





தொடர்ந்து அவர்கள்100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி ஜி ராம்ஜி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதைகண்டித்தும், மத்திய அரசின் திட்டமான இந்தத் திட்டத்தில் 40 சதவீதம் நிதிச் சுமையை மாநில அரசின் மீது திணிக்காதே என்றும், தமிழ்நாடு ஊரக புத்தகத் திட்டத்தில் 01.01.2026 முதல் மாவட்டங்களில் நியமிக்கப்படும் உதவி திட்ட அலுவலர் பணியிடங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களைக் கொண்டு நிரப்பிடுக என பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.