ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், எக்கட்டாம் பாளையம் ஊராட்சி, அண்ணாமலைபாளையம் அருகில், முதலைமடை ஓடையின் குறுக்கே ரூ.12.65 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணியை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் இன்று (16.12.2025) துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், எக்கட்டம்பாளையம் கிராமம் நொய்யல் ஆறுக்கு அருகில் உள்ளது. இங்கு உள்ள கிணறுகள் மற்றும் போர்வெல்களில் (TDS) மொத்தக் கரைந்த திடப்பொருள்கள் அளவு அதிகமாக உள்ளதால் நீரின் தரம் குறைவாக உள்ளது இந்த பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு முதலைமடை ஓடையில் குறுக்கே அணை கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி, இன்றைய தினம், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் இன்று நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் ரூ.12.65 கோடி மதிப்பீட்டில் முதலைமடை ஓடையின் குறுக்கே அணை கட்டும் பணியினை துவக்கி வைத்தார். இது நிலத்தடி நீரை அதிகரிக்கவும், நீர் தரத்தை மேம்படுத்தவும் உதவும். முதலைமடை ஓடையில், கீழ்பவானி திட்டம் பிரதான கால்வாயின் கசிவு நீர் சென்று நொய்யல் ஆற்றில் கலந்து விடுகிறது. எனவே இத்திட்டத்தில் LBP கசிவு நீரினை தேக்குவதன் மூலம் சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்வளத்தை அதிகரித்தும், TDS அளவைக் குறைத்து, குடிநீர் தரத்தை மேம்படுத்தவும், மேலும் இத்திட்டத்தில் தடுப்பணையின் நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தடுப்பணையின் அதிகபட்ச வெள்ள நீர் அளவு 8234.26 Cs, தடுப்பணையின் நீளம் 100 மீட்டர், தடுப்பணையின் உயரம் 200 மீட்டர், தடுப்பணையின் கொள்ளளவு 0.55 மி.கன அடி மற்றும் 580.78 ஏக்கர் இத்தடுப்பணையின் மூலம் பயன்பெறுகின்றன. இத் திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம், 580.78 ஏக்கர் பரப்பளவிலான மொத்த நீர்ப்பாசனப் பயன் பெறுவதுடன் அதனை சுற்றியுள்ள குக்கிராமங்களில் உள்ள 37 திறந்தவெளி கிணறுகள் மற்றும் 59 ஆழ்துளைக் கிணறுகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த கீழ்பவானி திட்டம் (LBP) கசிவுநீரைத் தக்கவைத்து, அது படிப்படியாக நிலத்தடி நீர் அமைப்பில் ஊடுருவுவதை (percolation) உறுதி செய்யும் இந்தத் திட்டம், நீர் தரத்தை மேம்படுத்துதல், விவசாயத்திற்கு உதவுதல் மற்றும் இப்பகுதியைச் சார்ந்த பொதுமக்களுக்கு ஒரு நிலையான நீர் விநியோகத்தை உறுதி செய்வதுடன் நீண்ட கால நன்மைகளையும் வழங்கும்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல குழுத்தலைவர் இல.பத்மநாபன், கண்காணிப்பு பொறியாளர் (நீர்வள ஆதாரத்துறை) கோபி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
%20(1).jpg)
.jpeg)
.jpg)