Type Here to Get Search Results !

ஈரோடு பேருந்து நிலையத்தில் 18.12.2025 நாளை இயற்கை சந்தை நடைபெற உள்ளது என கலெக்டர் தகவல்.


ஈரோடு மாவட்டத்தில், மகளிர் திட்டத்தின்கீழ் செயல்பட்டுவரும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் இயற்கை முறை வேளாண்மையில் அங்கக சான்றிதழ் பெற்று விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைப்பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு சந்தைப்படுத்திட வருகின்ற 18.12.2025 நாளை ஈரோடு பேருந்து நிலையத்தில்  இயற்கை சந்தை நடைபெற உள்ளது, என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.



மேற்படி இயற்கை சந்தையில் மகளிர் விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்கள் மூலம் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள், பழவகைகள், கீரைகள், மூலிகைவகைகள், வாழைப்பழம், வாழைப்பூ, பராம்பரிய அரிசி வகைகள் (மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, வாசனை சீராக சம்பா, கிச்சிலி சம்பா, மைசூர்மல்லி, காட்டுயாணம், ரத்தசாலி, தூயமல்லி, கருங்குறவை) வேர்க்கடலை, எள்ளு, தேங்காய், பாரம்பரிய அரிசியில் செய்த அவல் வகைகள், நாட்டுக்கோழி, நாட்டுக்கோழி முட்டைகள், வெல்லம், நாட்டு சர்க்கரை, மஞ்சள்தூள், சிறுதானியம் (சாமை, தினை, வரகு, பனிவரகு, கேழ்வரகு, சோளம், கரும்பு, குதிரைவாலி), கறிவேப்பிலை, புதினா, கொத்துமல்லி, ஆவாரம்பூ, மஞ்சள் கரிசலாங்கண்ணி, மாம்பழம், நாட்டுமாடு பால், நெய், சிப்பிக்காளாண், தேன் போன்றவைகளை விவசாயிகள் நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய மேற்காணும் பொருட்கள் இடம்பெறவுள்ளது.



எனவே, 18.12.2025 ஈரோடு பேருந்து நிலையத்தில் நடைபெறும் இயற்கை சந்தையில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்கி, மகளிர் சுய உதவிக்குழுக்களை ஊக்குவித்து, பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட ஆதரவு தருமாறு, கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.