Type Here to Get Search Results !

சத்தியமங்கலம் வட்டாரம், அரசூர் வாரசந்தை நடைபெறும் இடத்தில் இயற்கை சந்தை நடைபெற உள்ளது என கலெக்டர் தகவல்.


ஈரோடு மாவட்டத்தில், மகளிர் திட்டத்தின்கீழ் செயல்பட்டுவரும் மகளிர் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவிக்கின்ற விளைப்பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு சந்தைப்படுத்திட  17.12.2025 இன்று சத்தியமங்கலம் வட்டாரம், மாக்கினாங்கோம்பை ஊராட்சி, அரசூர் வாரசந்தை நடைபெறும் இடத்தில் இயற்கை சந்தை நடைபெற உள்ளது.



மேற்படி இயற்கை சந்தையில் மகளிர் விவசாயிகளை ஒன்றிணைத்து காய்கறிகள், பழவகைகள், கீரைகள், சிறுதானியம் (கேழ்வரகு மற்றும் சோளம்), பயிறு வகைகள் (கொள்ளு, தட்டைப்பயிறு மற்றும் பாசிபயிறு), புளி, எள்ளு, சுண்டல், வேர்க்கடலை, தேங்காய், மற்றும் தேன், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், சத்துமாவு, கருப்பட்டி, வெல்லம், நாட்டு சர்க்கரை, மஞ்சள்தூள், மசாலாப் பொடி வகைகள், சிறுதானியப் புட்டு வகைகள் (கோதுமை, கேழ்வரகு மற்றும் சோளம்),  வாத்து முட்டை, நாட்டுக்கோழி, ஆயுர் வேதிக் மருத்துவப் பொருட்கள் (ஹேர் ஆயில், சோப்பு, ஷாம்பூ, பொடுகு ஷாம்பு, மூட்டுவலி மருந்து, சளி இருமல் மருந்து) மற்றும் ஜூஸ் வகைகள் போன்றவைகளை மகளிர் விவசாயிகள் நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய உள்ளனர்.


17.12.2025 இன்று சத்தியமங்கலம் வட்டாரம், மாக்கினாங்கோம்பை ஊராட்சி, அரசூர் வாரசந்தையில் நடைபெறும் இயற்கை சந்தையில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்கி, மகளிர் உதவிக்குழுக்களை ஊக்குவித்து, பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.








Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.