உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நாளை 03.12.2025 சென்னையில், நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்பதற்காக பேரூராட்சி மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள் செல்லும் வாகனத்தை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (02.12.2025) ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.
நாளை 03.12.2025 உலக மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்பதற்காக ஆப்பக்கூடல், வாணிப்புத்தூர், அரச்சலூர், அத்தாணி, மொடக்குறிச்சி, நெரிஞ்சிப்பேட்டை, ஒலகடம், நம்பியூர், அவல்பூந்துறை, காஞ்சிகோயில், பி மேட்டுப்பாளையம், பெத்தாம்பாளையம், ஊஞ்சலூர் ஆகிய 13 பேரூராட்சிகளைச் சேர்ந்த 13 மாற்றுத்திறனாளி உறுப்பினர்களை அழைத்துச் செல்லும் 2 வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து துவக்கி வைத்தார். இவ்வாகனத்தில் செயல் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகளுடன் பயணம் செய்கின்றனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளி உறுப்பினர்களை நலம் விசாரித்து வழி அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வில், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) வெங்கடேஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpeg)