சோலார் பேருந்து நிலையத்திலிருந்து 04.12.2025 நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும் என கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சோலார் பகுதியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் 26.11.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கரூர். மதுரை, வெள்ளகோவில் மார்க்கங்களில் செல்லும் அனைத்து பேருந்துகளும் 04.12.2025 வியாழக்கிழமை காலை 11.00 மணி முதல் சோலார் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளது என்பதை பொதுமக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
அவ்வாறே மதுரை திருச்சியில் இருந்து கரூர் மார்க்கமாகவும் மற்றும் வெள்ளகோயில் மார்க்கமாகவும் ஈரோடு வருகின்ற பேருந்துகள் சோலார் பேருந்து நிலையத்திற்கு வந்து சேரும் வகையில் இயக்கப்படும். சோலார் பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதனைத் தாண்டி பயணிக்கும் பயணிகளுக்கும் மற்றும் ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கரூர் மார்க்கமாகவும் மற்றும் வெள்ளகோயில் மார்க்கமாகவும் பயணிக்கும் பயணிகள் சோலார் பேருந்து நிலையம் வருவதற்கும் நகர பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் சோலார் பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு நகரத்திற்குள் வருவதற்கு போதுமான ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.
.jpg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)