ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (03.12.2025) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தம் தொடர்பான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 27.10.2025 அன்று அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒவ்வொரு கட்டத்திலும் பங்கேற்று வருகின்றனர். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் தொடர்ச்சியாக இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு திரும்ப பெறப்படாத கணக்கீட்டு படிவங்களின் பட்டியல் ஆனது தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு வழக்கமான அடிப்படையில் பகிரப்பட்டு வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு முன் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய வாக்காளர் பதிவு அலுவலர் நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டங்களும் நடத்தப்பட்டுவருகின்றன. திரும்ப பெறப்படாத கணக்கீட்டுப் படிவங்களின் பட்டியல், குறிப்பிட்ட முகவரியில் இல்லாத வாக்காளர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள். இறந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவு செய்தவர்கள் போன்ற காரணங்களுடன் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பட்டியல் 11.12.2025 அன்று கணக்கீட்டு காலம் நிறைவடைந்த பின்னர் இறுதி செய்யப்படும்.
எனவே, அனைத்து வாக்காளர்களும் தங்களது நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை கடைசி தேதி வரை காத்திருக்காமல், விரைந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் முழுமையான மற்றும் பிழையற்ற வாக்காளர் பட்டியல் தயாரிப்பினை உறுதி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் சமர்ப்பிக்கும் காலம் 16.12.2025 முதல் 15.01.2026 வரை ஆகும். இந்தக் காலப்பகுதியில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் அல்லது ஏற்கனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். எந்த ஒரு தகுதியான குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல், எந்த ஒரு தகுதியற்றவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத வகையில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 04.11.2025 முதல், மொத்தமுள்ள 2222 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இல்லந்தோறும் சென்று உரிய வழிகாட்டுதலுடன் கணக்கெடுப்பு படிவமானது மொத்தம் உள்ள 19,97,189 வாக்காளர்களில் நாளது வரை 19,28,231 (96.55%) படிவங்கள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதீமுள்ள 68,958 வாக்காளர்களிடம் கணக்கெடுப்பு படிவம் பெறப்பட வேண்டியுள்ளது. மீதமுள்ள படிவங்களை திரும்ப பெறுவது குறித்தும் மேலும், இறப்பு / குடிபெயர்ந்தோர் / நிரந்தர முகவரி மாற்றம் / இருமுறை பதிவு உள்ளிட்ட இனங்களின் மீது தனி கவனம் செலுத்தி தகுதியான அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்திட உரிய ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்பட்டது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளானது 11.12.2025 அன்றுடன் முடிவடையவுள்ளதால், வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து உடனடியாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) அல்லது வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA) ஆகியோரிடம் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மற்றும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்திலும் உதவி மையம் (Help Desk) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படிவத்தை பூர்த்தி செய்வதில் சந்தேகங்கள் ஏதுமிருப்பின் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு படிவத்தில் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் கைபேசி எண் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. அதில் தொடர்புகொண்டோ தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொண்டு தங்களது படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) அல்லது வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA) ஆகியோரிடம் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட இலவச தொடர்பு மையம் – 1950, மாவட்ட உதவி மைய எண் (வாட்ஸ் ஆப்) - 90425 80535, 98. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி - 0424 2251618, 99. ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி - 0424 2254224, 100. மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி - 0424 2500123, 103. பெருந்துறை சட்டமன்ற தொகுதி - 04294 220577, 104. பவானி சட்டமன்ற தொகுதி – 04256 230334, 105. அந்தியூர் சட்டமன்ற தொகுதி - 04256 260100, 106. கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி - 04285 222043, 107. பவானிசாகர் (தனி) சட்டமன்ற தொகுதி - 04295 220383 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சு.சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) திரு.ராம்குமார் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)