Type Here to Get Search Results !

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2025 ம் ஆண்டிற்கான உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு......


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் மாநிலம் முழுவதும் காவல்துறையில் உள்ள உதவி ஆய்வாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில்  21.12.2025 ம் தேதி காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை முதன்மை தேர்வும், பிற்பகல் 03.30 மணி முதல் மாலை 05.10 மணி வரை தமிழ் மொழி தகுதித் தேர்வும் ஈரோடு தாலுக்கா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திண்டல் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளாளர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மற்றும் வேளாளர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.




இத்தேர்வினை ஈரோடு மாவட்டத்தில் எழுதும் 3491 (837 பெண்கள் உட்பட) தேர்வர்களுக்கு வழங்கப்படும் வினாத் தாள்கள் சென்னை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திலிருந்து தேர்வர்களுக்காக கொண்டு வரப்பட்டு, வினாத் தாள்கள் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பில் வைக்கப்பட்டது. 21.12.2025 ம் தேதி காலை 07.00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் உரிய அதிகாரிகள் மூலம் அந்தந்த தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்திய காவலர் வழிக்காவலுடன் எடுத்துச் செல்லப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகளின்படி தேர்வு நடைபெற்றது.

3491 தேர்வர்களுக்கு முதன்மை எழுத்து தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகள் அனைத்தும் வி.சசிமோகன், காவல்துறை துணை தலைவர், கோவை சரகம், கோவை அவர்களின் நேரடி கண்காணிப்பில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எ.சுஜாதா தலைமையில் துணைகுழு உறுப்பினர்களாக எம்.விவேகானந்தன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம், ஈரோடு, வி.தங்கவேல், காவல் துணைக்கண்காணிப்பாளர், மாவட்ட குற்ற பதிவேடு கூடம் மற்றும் கே.ராஜபாண்டியன், காவல் துணை கண்காணிப்பாளர், குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை,(Civil Supply CID) ஈரோடு சரகம் ஆகியோர் நியமிக்கப்பட்டு நடத்தப்பட்டது. 




மேலும் இத்தேர்வு பணிக்கு 300 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் மேற்பார்வையாளர்களாகவும், கண்காணிப்பு குழு பொறுப்பாளர்களாகவும் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் வழிகாட்டு நெறிமுறைகளின் படி அமைக்கப்பட்டு தேர்வு சிறப்பாக நடைபெற்றது.




காலையில் நடைபெற்ற பிரதான எழுத்து தேர்வில் திண்டல் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்வு எழுத நியமிக்கப்பட்ட 2000 தேர்வர்களில் 1320 தேர்வர்களும், வேளாளர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் தேர்வெழுத நியமிக்கப்பட்ட 654 தேர்வர்களில் 426 தேர்வர்களும் மற்றும் வேளாளர் பொறியியல் கல்லூரியில் 837 (பெண்கள்) தேர்வர்களில் 514 தேர்வர்களும் என மொத்தமாக 3491 தேர்வர்களில் 2260 தேர்வர்கள் தேர்வில் கலந்துகொண்டனர்.


மேற்படி தேர்வில் மொத்தமாக 1231 (ஆண்: 908 பெண்: 323) தேர்வர்கள் தேர்வில் கலந்துகொள்ளவில்லை என்பதை ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.