மாநில அளவிலான எறிபந்து போட்டி கோவை மாவட்டம் அவிநாசி பழனியப்பா பள்ளியில் நடைபெற்றது. 16வயதுக்குட்பட்டோர் பிரிவில் வேளாளர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவியர் கலந்து கொண்டு விளையாடினர். பதினோராம் வகுப்பு மாணவியர் கே.எஸ். அஸ்மிதா, பி. பிரதிக்ஷா, எம். கௌசாலிகா, சிவ எம். வாரணி, பத்தாம் வகுப்பு மாணவி எஸ். சாரா ஜஸ்மின், ஒன்பதாம் வகுப்பு மாணவி வி. லக்ஷண்யா மற்றும் ஏ.ஆர்.ஜோஷிகா ஆகியோர் உட்பட மொத்தம்ஏழு மாணவியர் வாரணாசியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவியர்களைப் பள்ளியின் தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர், வேளாளர் கல்வி நிறுவனத்தின் நிர்வாகி எம்.யுவராஜா, பள்ளியின் முதல்வர் செல்வி வெ. லதா, வேளாளர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி நிர்வாக அதிகாரி எல். சென்னியப்பன், வேளாளர் பொறியியல் கல்லூரி மேலாளர் பெரியசாமி மற்றும் ஆசிரியைகள் பாராட்டிக் கௌரவித்தனர்.
%20(1).jpg)
.jpeg)