Type Here to Get Search Results !

ஈரோடு அறிவுக்கோயிலில் உலக தியான தினம்....


உலக தியான தினத்தை முன்னிட்டு ஈரோடு அறிவுக் கோயிலில் கடந்த (21. 12.25) அன்று மாலை 6 மணிக்கு பெரியார் நகரில் உள்ள அறிவுக்கோயிலில்
 உலக தியானதினம் கொண்டாடப்பட்டது.




கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடியின் முயற்சியால் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்கப்பட்டது. அதேபோல் டிசம்பர் 21ம் தேதியை உலக தியான தினமாகவும் அனுசரிக்கக்கோரி இந்தியா சார்பில் ஐக்கிய நாடுகள் பொதுசபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்மானம் ஒரு மனதாக ஏற்கப்பட்டு  உலகெங்கும் உலக தியான தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு ஈரோடு மனவளக்கலை மன்றம் டிரஸ்ட் சார்பில்  (21ம் தேதி) மாலை 6 மணிக்கு சிறப்பு தியான நிகழ்ச்சி ஈரோடு அறிவுக்கோயிலில் நடைபெற்றது.




நிகழ்ச்சியில், வேதாத்திரி பதிப்பக இயக்குனர் சதாசிவம் துரியாதீத தவம் நடத்திக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து உலகம் அமைதி பெற வாழ்த்து நடைபெற்றது. மனவளக்கலையைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தியானம் செய்தனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.