Type Here to Get Search Results !

“கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" 2- ஆவது கட்ட விரிவாக்கமாக மகளிர்களுக்கு வங்கி பற்று அட்டைகளை அமைச்சர் வழங்கினார்.


ஈரோடு மாவட்டம், பவானி, ஆர் என் புதூர், பகுதியில் உள்ள பிளாட்டின மஹாலில் இன்று (12.12.2025) மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர்  சு.முத்துசாமி அவர்கள் மகளிர் உரிமை திட்டம் இரண்டாம் கட்டமாக பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்கள்.


அறிஞர் அண்ணா அவர்களின்  பிறந்தநாளான செப்டம்பர் 15  அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.


முதல் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 1,13,75,492  மகளிர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி. ரூ.1000 வீதம் இதுவரை ரூ.30,838 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 4,09,354  மகளிர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ.1000 வீதம் இதுவரை ரூ.26,000 பெற்றுள்ளனர்.


இரண்டாம் கட்டமாக,தற்போது. தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் கூடுதலாக சுமார் 17 லட்சம் மகளிர் இந்த திட்டத்தால் பயனடைய உள்ளனர்.    ஈரோடு மாவட்டத்தில், 15.07.2025 முதல் 13.11.2025 வரை நடைப்பெற்ற உங்களுடன் ஸ்டாலின்  340  முகாம்கள் நடைபெற்றுள்ளது. அதில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான மனுக்கள் 1,04,770 வரப்பெற்றுள்ளது.  இதில் தகுதியான 43,852 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களில் இன்றையதினம் மகளிர்களுக்கு ரூ.4,38,52,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.  


மேலும், மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள்  மகளிர் உரிமை திட்டம் இரண்டாம் கட்டமாக 1000 மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டையினை (ATM Card) வழங்கினார்.


தொடர்ந்து செய்தி  மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தினகரன் நாளிதழ்  புகைப்படக்காரராக பணியாற்றிய சுப்பிரமணியம் அவர்களுக்கு பத்திரிக்கையாளர் ஓய்வு ஊதியம் பெறுவதற்கான ஆணையினை வழங்கினார். 


இந்நிகழ்ச்சியின்போது, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்   ச.கந்தசாமி,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்  வி.சி.சந்திரகுமார்,  அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம்,  ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் .சு.சாந்த குமார், வருவாய் கோட்டாட்சியர்  சிந்துஜா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வராஜ்,  மண்டலக்குழுத்தலைவர்கள் பிகே.பழனிசாமி,  சசிகுமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.