ஈரோடு மாவட்டம், பெருந்துறை, மேட்டுக்கடை ஆர். எஸ் சாலையில் உள்ள தங்கம் மஹாலில் இன்று (12.12.2025) மாண்புமிகு வீட்டு வசதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் சிறு தானிய உணவுத் திருவிழாவில் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகினார்.
மாண்புமிகு வீட்டு வசதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இயற்கை மற்றும் உயிர்ம வேளாண்மையை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு விவாசயிக்கும் தனி முக்கியத்துவம் தர வேண்டும் என்ற அடிப்படையில், வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் உருவாக்கி கொடுத்துள்ளார்கள். மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகள், நெசவாளர்கள், ஆகியோர்களை கருத்தில் கொண்டு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்தியூர் பகுதியில் 1000 -க்கு மேற்பட்ட விவசாயிகள் 70 ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருந்த நிபந்தனை பட்டாக்களை அயன் பட்டாக்களாக மாற்ற உத்தரவிட்டுள்ளார்கள். 75 ஆண்டுக்கு மேலாக நம்பியூர் பகுதிகளில் எல்.பி.பி. வாய்க்கால் மற்றும் பவானிசாகர் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்திருந்த நிலையில் எஞ்சிய உள்ள நிலங்கள் மீண்டும் விவசாயிகளுக்கு ஒப்படைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காளிங்கராயன் வாய்க்கால் உள்ள நீரானது கடைமடைக்கும் சென்று பாசன வசதி பெற வேண்டும் வகையில் விரைவில் பணிகள் துவக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும், உணவுப்பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நோயற்ற மற்றும் வளமான சமுதாயத்தை உருவாக்குவதற்கும், எதிர்கால சந்ததியினருக்கு வளமான மண் மற்றும் இயற்கை சூழலை உருவாக்குவதற்கும், ரசாயனங்கள் இல்லாத உணவு தானிய உற்பத்தியை உறுதி செய்வதற்கும், விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை மற்றும் அதன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட தமிழ்நாடு அரசு முக்கிய பங்களித்து வருகிறது என தெரிவித்தார்.
இன்றைய தினம், 2 பயனாளிகளுக்கு, முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம் கீழ் தலா ரூ.1500 வீதம், என மொத்தம் ரூ.3000/- மானியமாக, 1 பயனாளிக்கு பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் ரூ.1,14,533 /- மற்றும் 1 பயனாளிகளுக்கு ரூ.76,705/-மானியமாக, கீழ் 1 பயனாளிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் ரூ.1,000/-, 1 பயனாளிகளுக்கு கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் கீழ் ரூ.2,075 இத்திட்டத்தின் மற்றுமொரு 1 பயனாளிக்கு ரூ.225 /- மானியமாக, வேளாண் இயந்திரமாக்குதல் திட்டம் கீழ் 1 பயனாளிகளுக்கு ரூ.67,969/- உளுந்து சிறுதளை விநியோகம் திட்டத்தின் கீழ் 2 பயானிகளுக்கு முழு மானியம் என 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக, சிறுதானிய உணவு வகைகள் குறித்து தனியார் மற்றும் அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி 16 அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார், இந்த கண்காட்சியில் சிறுதானிய உணவு வகைகள் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட உணவு வகைகள் கண்காட்சியிலும், நாட்டு விதைகள் உயிர்ம உரங்கள், அரிசி வகைகள் ஆகியவை கண்காட்சியினை சுமார் 2000 விவசாயிகள் வருகை தந்து பார்த்து பயனடைந்தனர்.
தொடர்ந்து விவசாயத்தில் தொழில்நுட்ப குறித்து, தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்துரையாற்றினார்கள். மேலும், சிறுதானிய வகைகளுக்காக தொழில்நுட்ப கையேடு பயன்பாடு குறித்த புத்தகத்தினை வெளியிட்டார்.
இவ்விழாவில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், வேளாண்மை இணை இயக்குநர் சிவக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், வேளாண்மை துணை இயக்குநர் சரவணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpg)
%20(1).jpeg)
.jpeg)
.jpg)