Type Here to Get Search Results !

மனித கடத்தல் மற்றும் கொத்தடிமை தொழில் முறை ஒழிப்பு குறித்த பயிற்சியினை கலெக்டர் துவக்கி வைத்தார்.


டிசம்பர் 2 சர்வதேச அடிமைத்தன ஒழிப்பு நாளையொட்டி இன்று (02.12.2025) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் துறையால் மனித கடத்தல் மற்றும் கொத்தடிமை தொழில் முறை ஒழிப்பு குறித்த மாவட்ட அளவிலான பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் துவக்கி வைத்து, தெரிவித்ததாவது,


கொத்தடிமை தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டம் 1976 ன் படி கொத்தடிமை தொழில் முறை என்பது கட்டாய உழைப்பின் ஒருவகையாகும் இந்தியாவில் பலவீனமான சமூகங்களை பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டும் கொத்தடிமை தொழில் முறையினை தடுப்பதற்காகவே இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 23-ன்படி மனிதர்களின் உழைப்பினை சுரண்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது மனிதர்களை உழைப்பிற்காகவும், பாலியல் தொழிலுக்காகவும், உடல் உறுப்புகளுக்காகவும் கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக இத்தகு தினத்தினை அனுசரித்து வருகின்றோம்.


எனவே வருவாய்த்துறை, காவல்துறை, தொழிலாளர் துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளுடன் தன்னார்வ அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து செயலாற்றி கொத்தடிமை தொழில் முறை இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன், எனத் தெரிவித்தார்.


கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் (RBLA) நிதிசாரா உதவி வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கோரிக்கை மனுவினை அளித்தார்கள்.

தொடர்ந்து இப்பயிற்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அ. சுஜாதா, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடராஜன், பிரபு ஆகியோர் மனித வணிகம் மற்றும் கொத்தடிமை தொழில் முறை குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் கொத்தடிமை விரிவாக தொழிலாளர்கள் கண்காணிப்பு குழு உறுப்பினர்களுக்கு விளக்கவுரையாற்றினார்கள். 

இப்பயிற்சியில் ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்)  கோ.ஜெயலட்சுமி, ஐ.ஜே.எம். நிறுவனத்தை சார்ந்த மைக்ஆஸ்டின்,  சினேகா,  சாராள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.