ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இன்று (19.12.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
பசுமையான தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும் என்ற வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயற்கை வளத்தை மேம்படுத்தும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம், கோத்தாரி இன்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL), எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் (GTM) ஆகியவற்றுடன் இணைந்து, இது மாநிலத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அரசு, தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படும் திட்டமாகும்.
இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தான்றி, புங்கம், மகிழம், நீர்மருது ஆகிய மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், உதவி வன பாதுகாவலர் தெய்வ சர்மம், வன சரக அலுவலர் ஜெயலட்சுமி, ஒருங்கிணைப்பாளர் செல்வி.கீர்த்தனா, தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)