ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கண்காட்சி மற்றும் விற்பனை 19.12.2025 முதல் 03.01.2026 வரை நடைபெறவுள்ளது. மேலும், டெஸ்வேலி குளோபல் மார்க்கட்டில் அமைந்துள்ள பூம்புகார் விற்பனை நிலைய கிளைகடை எண்1114லும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கண்காட்சி மற்றும் விற்பனை 19.12.2025 முதல் 03.01.2026 வரை நடைபெறவுள்ளது
இக்கண்காட்சியில் குழந்தைஏசு, அன்னைமாதா சிலை ஏசு சிலை அழகிய மயில் மற்றும் புறா சிலைகள், காகித கூழ் சிற்பங்கள் களிமண் சிற்பங்கள், மரம், பித்தளை கருப்பு உலோகம் வெண் உலோகம் போன்றவற்றால் செய்த எண்ணற்ற புத்தாண்டு பரிசுப்பொருட்கள், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், முரல் ஓவியம் கண்ணாடியில் வரையப்பட்ட ஓவியங்கள் கலம்காரிஓவிய தட்டு மீனாகாரி பெட்டிகள் மரப்பெட்டிகள் ரவிவர்மா மாதிரி ஓவியங்கள், ஜெய்ப்பூர் ஓவிய பெட்டிகள், சாவி கொக்கிகள், வெள்ளை உலோகத்தினாலான கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் ரூபாய் 50/- முதல் 1,00,000/- வரையிலான கைவினை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன குறிப்பிட்ட பொருட்களுக்கு சிறப்புதள்ளுபடி வழங்கப்படுகிறது.பெருமக்கள் கிறிஸ்துமஸ் மற்றும் மற்றும் புத்தாண்டிற்கு தங்களது இல்லங்களுக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் பரிசுப்பொருட்கள் வாங்கி மகிழ இக்கண்காட்சி உதவியாக இருக்கும்.
இத்தகவலை பூம்புகார் மேலாளர் என்.சேவியர் தெரிவித்துள்ளார்.
%20(1).jpg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)