ஈரோடு மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு சோலார் அருகே புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 26.11.2025 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளக்கோவில், கொடுமுடி, கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், காரைக்கால், திருச்செந்தூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு செல்லக் கூடிய பேருந்துகள் அனைத்தும் சோலார் புதிய பேருந்து நிலையத்தை மையமாக கொண்டு இயக்க ஆணையிடப்பட்டுள்ளது. இப்பேருந்துகளில் சோலார் புதிய பேருந்து நிலையத்திலிருந்து முறையாக இயக்கப்படாத பேருந்துகள் மீது காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, பேருந்து உரிமையாளர்கள் முறையாக இயக்கப்பட அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், மேற்க்காணும் வழித்தட மார்க்கமாக செல்லும் பொது மக்கள் ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சோலார் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று வர இணைப்பு பேருந்துகள் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சோலார் பேருந்து நிலையத்தில் முறைப்படி இயக்கப்படாத பேருந்துகள் மீது அலுவலர்கள் நடவடிக்கை.....
December 18, 2025
0

%20(1).jpg)