Type Here to Get Search Results !

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் நலத்திட்ட உதவிகள், உலமாக்கள் மக்கள் பணியாளர் நலவாரிய அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 35 பயனாளிகளுக்கு ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள், உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரிய அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் இன்று (18.12.2025) வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் போது தெரிவித்ததாவது,




சிறுபான்மையினர் உரிமைகள் தினம் முதன் முதலில் டிசம்பர் 18, 1992 அன்று ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மத வழி சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், புத்த மதத்தினர், பாரசிகர்கள், சீக்கியர்கள் மற்றும் ஜெயின் ஆகியோர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மற்றும் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் சென்றடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுபான்மையினர் தின விழாவானது 1992 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. உரிமைகள் இதன்படி, இந்த ஆண்டு இவ்விழாவானது இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவானது கருப்பொருள் மனித உரிமைகளின் மதிப்புகளை மீண்டும் உறுதிப்படுத்துவதும், அவை மீண்டும் மனித குலத்திற்கு ஒரு வெற்றிகரமான கருத்தாக இருப்பதை கூறுவதாகும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசால் சிறுபான்மையினருக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்,  கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் ,  மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்,  மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம்,  டாம்கோ கடனுதவி,  உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்குதல், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், கிறித்துவ தேவாலயங்கள் பழுது பார்த்தல் மற்றும் புனரமைப்பு, கல்லறை தோட்டம் மற்றும் கபர்ஸ்தான்களுக்கு சுற்றுச்சுவர் கட்டுதல், சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை திட்டம், சிறுபான்மையின மாணவிகளுக்கான கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம். பிரதான் மந்திரி ஜன்விகாஸ் கார்யகிராம் திட்டம் (PMJVK), கிறித்தவர் முஸ்லிம்களின் பயன்பாட்டிற்காக கல்லறைத்தோட்டம் கபர்ஸ்தான் அமைக்கும் திட்டம், புத்த, சமண மற்றும் சீக்கியமதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம், புத்த மதத்தினர், நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்த்தன திருவிழாவிற்கு புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு நிதியதவி வழங்கும் திட்டம், முஸ்லிம் மாணவ/மாணவிகள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு மேற்கொள்ள முதலமைச்சரின் கல்வி உதவித்தொகை,  ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவர்களுக்கு மானியம் வழங்குவது போன்ற  திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.




தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் புதியதாக உறுப்பினர்களாக இணைந்த 15 நபர்களுக்கு உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரிய உறுப்பினர் அட்டைகளையும், சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு (துணி வியாபாரம், தையல் தொழில், மளிகை கடை, கைத்தொழில், சிக்கன் சென்டர், எண்ணெய் வியாபாரம், பிரியாணி வியாபாரம் உள்ளிட்ட தொழில்கள்) துவங்க குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவிகள் என 20 பயனாளிகளுக்கு ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கோ.முரளி, இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) ப.கந்தராஜா, சிறுபான்மையினர் நல அலுவலர் (கண்காணிப்பாளர்) முருகேசன், அரசு காஜி கியாபத் துல்லா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.








Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.