ஈரோடு பெருந்துறை சிப்காட் திட்ட அலுவலகத்தில் இன்று (09.01.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் "சிப்காட் போகி" என்ற மாபெரும் தூய்மைப்பணி - 2026 நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் போது தெரிவித்ததாவது,
முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் ஒட்டுமொத்த ஈர்ப்பையும் செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் வகையில் சிப்காட்டின் அனைத்துத் தொழிற்பூங்காக்களிலும் தூய்மையான, அழகியல் மற்றும் சுகாதாரமான சூழலைப் பராமரிப்பதில் சிப்காட் உறுதியாக உள்ளது. இந்த முயற்சிகளை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், சிப்காட் தனது அனைத்துத் தொழிற்பூங்காக்களிலும் "சிப்காட் போகி" என்ற தலைப்பில் ஒரு விரிவான மாபெரும் தூய்மைப் பணி இயக்கத்தைத் திட்டமிட்டுள்ளது. இந்த இயக்கம் 2026 ஆம் ஆண்டு இன்று தொடங்கி, சமத்துவப் பொங்கல் கொண்டாட்டத்துடன் இணைந்து ஜனவரி 14 ஆம் தேதி முடிவடையும் என தெரிவித்தார்,
இப்பணிகளானது, சிப்காட் தனது துப்புரவுப் பணியாளர்களைச் சாலைகள். வடிகால்கள், திறந்தவெளிகள் மற்றும் பிற பொது வசதிகள் உள்ளிட்ட பொதுப் பகுதிகளில் தீவிரத் தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த தூய்மைப் பணி இயக்கத்தின் உச்சகட்டமாகவும், அனைத்துப் பங்குதாரர்களிடையேயும் சிறந்த சமூக உணர்வை வளர்க்கும் வகையிலும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி அந்தந்தத் தொழிற்பூங்காக்களின் திட்ட அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்படவுள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் உள்ள ஈங்கூர் மற்றும் பெருந்துறை கிராமங்களில் 2663 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் ஒரு தொழிற்பூங்காவை 2000-ம் ஆண்டு நிறுவப்பட்டது.இந்த பூங்கா முக்கியமாக ஜவுளி மற்றும் பொதுத் தொழில்களுக்கு இடமளிக்கிறது. இதுவரை 2096.09 ஏக்கர் 369 அலகுகளுக்கு ஒதுக்கப்பட்டு மற்றும் 254 அலகுகள் தற்போது இயங்கி வருகின்றன.
தற்போது போகி பண்டிகையை முன்னிட்டு, பெருந்துறை தொழிற்சாலை வளாகம் முழுவதும் பயன்பாட்டு பகுதிகளான சாலை, வடிநீர் கால்வாய், உந்து நிலையம் போன்ற பகுதிகளில் தூய்மைப் பணிகள், சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் பூங்காவிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
பசுமைப் பணிகள் கூட்டுப் பங்கேற்பு மூலம் இந்தப் பிரச்சாரம் உகந்த தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்வதற்காக, சிப்காட் வளாகங்களுக்குள் உள்ள ஒதுக்கீடு பெற்ற தொழிற்சாலைகளையும் எ சிப்காட் குழுக்களுடன் ஒருங்கிணைந்து, தங்களின் சொந்த வளாகங்களில் இணையாகத் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுவிடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தூய்மைப் பணித் திட்டத்தின் வெற்றிகரமான நிறைவைக் குறிக்கும் வகையிலும், இதில் ஈடுபட்டுள்ள அனைவரிடையேயும் சகோதரத்துவப் பிணைப்பை வலுப்படுத்தும் வகையிலும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி அன்று அந்தந்தத் பொங்கல் அலுவலகங்களில் சமத்துவப் தொழிற்பூங்காக்களின் திட்ட கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், சிப்காட் செயற்பொறியாளர் (சென்னை) திருவருள், பெருந்துறை நகர் மன்றத்தலைவர் ராஜேந்திரன், பெருந்துறை, சிப்காட் திட்ட அலுவலர் சுஜா பிரியா தர்சினி, உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
.jpeg)
.jpg)
.jpg)