Type Here to Get Search Results !

”களமாடு” என்னும் கலை நிகழ்ச்சியில்வெற்றி பெற்ற சமூக நீதி கல்லுாரி விடுதி மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.


 ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (09.01.2026) நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்  சார்பில் நடத்தப்பட்ட ”களமாடு”  என்னும்  கலை நிகழ்ச்சியில் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் போது தெரிவித்ததாவது,


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் செயல்படும் அனைத்து சமூகநீதி கல்லூரி விடுதிகளிலும் கலை மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் மாணாக்கருக்கு உள்ள தனித்திறமையை கண்டறிந்து அவற்றுக்கு தேவையான பயிற்சி வழங்கிட ஏதுவாக மாணாக்கர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக "களமாடு" எனும் பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.


தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாள் சமூகநீதி நாளாக கொண்டாடும் விதமாக அனைத்து சமூகநீதி கல்லூரி விடுதிகளுக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்திட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு 17.09.2025 அன்று அனைத்து கல்லூரி விடுதிகளிலும் துவக்கி வைக்கப்பட்டது.


மேலும், மாணவ/மாணவியர்கள் போட்டியில் பங்கேற்பதற்கு 23.09.2025 வரை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் 11.10.2025 அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 சமூகநீதி கல்லூரி விடுதிகளில் பொறுப்பாளர்கள் மேற்பார்வையில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. 

இன்றைய தினம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், ரங்கம்பாளையம், அரச்சலுார், ஈரோடு ஆகிய பகுதிகளில் செயல்படும் 5 சமூக நீதி கல்லுாரி விடுதி மாணவ மாணவியர்களுக்கு "களமாடு” எனும் பெயரில் நடததப்பட்ட பாட்டுப்போட்டி, கோலப்போட்டி, தனிநபர் நடிப்பு, குழு நடனம்,   பேச்சுப்போட்டி, சதுரங்க விளையாட்டு, எறிபந்து, உள்ளிட்ட 17 வகையான போட்டிகளில் வெற்றி பெற்ற 143 மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மகேஸ்வரி, மக்கள் சிந்தனைப்பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.