Type Here to Get Search Results !

இணைய வழி வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் வழங்கினார்.


ஈரோடு மாவட்டம், சென்னிமலை, பி.எஸ்.ஏ.மஹாலில் (08.01.2026) நேற்று  நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் 271 பயனாளிகளுக்கு விலையில்லா இணைய வழி வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வகையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு ஒரு இருக்க இருப்பிடம் வேண்டும் என்பதற்காக வீட்டுமனைபட்டாக்களை வழங்க வருகிறார்கள். இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றது  பொதுமக்களின் நலன் கருதி கொண்டு பல்வேறு தி்ட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அனைத்து மகளிரும் பயன்பெறும்  வகையில் கட்டணமில்லா  விடியல் பயணம், உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் கல்லுாரி  மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினி திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும்   மகளிர் உரிமைத்திட்டம், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில் உங்களுடன் ஸ்டாலின்,  மக்களின் நலனை காக்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம், முதியோர்களுக்கான அன்புச்சோலை திட்டம், உயர்கல்வி செல்லும் மாணவ மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டம், உள்ளிட்ட  திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
 மேலும், அந்த வகையில் இன்றைய தினம் மணிமலைக்கரடு மக்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையாக ஏற்று இ-பட்டாக்களை வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வீட்டு மனை பட்டாக்கள், புதிய பட்டாக்கள் என்கிற வகையில் ஏறத்தாழ 4000 பட்டாக்கள் இப்பகுதிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இப்பட்டாக்கள் ஆன்லையில் பதிவுவேற்றம் செய்யப்பட்டு அந்த பட்டாக்களை எளிதில் தரவிறக்கம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  
 

இன்றைய தினம், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் மணிமலைக்கரடு பகுதியை சேர்ந்த 271 பயனாளிகளுக்கு விலையில்லா இணைய வழி வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
தொடர்ந்து சென்னிமலை, பசுவபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அம்மாப்பாளையம், நியாயவிலைக்கடையில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார்  சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, பெருந்துறை வட்டாட்சியர் ஜெகநாதன், சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம்,  உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.