Type Here to Get Search Results !

”காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியில் ” வெற்றி பள்ளிகள்” வாராந்திர பயிற்சியில் ஈடுபடும் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலெக்டர் கலந்துரையாடினார்.


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள்  (10.01.2026)   நேற்று                ”காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியில்   ” வெற்றி பள்ளிகள்” வாராந்திர பயிற்சியில் ஈடுபடும் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.


இன்றைய தினம் நடைபெற்ற காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர்கள் கல்வியறிவோடு சமூகம் மற்றும் பொது அறிவும் மேம்பட வேண்டும் என நோக்குடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடிய போது தெரிவிக்கையில், மாணவர்கள் சமூக மேம்பாட்டுக்காக தாங்கள் பயிலும் பள்ளி படிப்பினை ஊன்றுகோலாக வைத்து மேலும் முன்னேற, பாட புத்தகம் தாண்டி உலக அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு சமூக உணர்வை ஏற்படுத்தும் நாளிதழ்கள், செய்தித்தாள்கள் போன்றவற்றை படிப்பதில் அக்கறை செலுத்த வேண்டும். 


மேலும், மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியில் கற்பதற்கு ஏராளமான பாடப்பிரிவுகள் உள்ளது. எனவே தங்களுக்கு விருப்பமான பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி படிப்போடு அல்லாமல் போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகும் வகையில் பயிற்சி பெற வேண்டும். தனி மனிதனை சமூகத்தில் உயர்த்துவது கல்வியால் மட்டுமே இயலும். அத்தகைய கல்வியை மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கற்க வேண்டும், மேலும் தொடர்ந்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். 


மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனது அரசுப்பணியில் சேர்ந்த பிறகு சந்தித்த நிகழ்வுகள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன், மாணவ, மாணவியர்களின் பள்ளியில் ஏற்பட்ட சுவாரசியமான நிகழ்வுகள் குறித்து கேட்டறிந்தார். 


இன்றைய தினம் நடைபெற்ற காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில், வெற்றி பள்ளிகள் வாராந்திர பயிற்சியில் ஈடுபடும் அரசுப்பள்ளி மாணவ மாணவியர்களுடன் நடைபெற்றது. வெற்றிப் பள்ளிகள் என்பது தமிழ்நாடு அரசால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வார இறுதி நாட்களில் வட்டார அளவில் முதல் நிலை கல்லூரிகளில் படிப்பதற்கு பயிற்சி கொடுக்கும் பள்ளிகள் ஆகும்.

இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளியில் பயிலும் 29 வெற்றி பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். பள்ளி மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருக்குறள் புத்தகங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான்விழி, பள்ளி ஆசிரியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.