ஈரோடு மாவட்டம், சித்தோடு அரசுப் பொறியியல் கல்லூரியில் இன்று (9.01.2026) மாண்புமிகு வீட்டு வசதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தலைமையில், தூய்மை பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டிஆறுச்சாமி அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு துாய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை
அமைச்சர் அவர்கள் பேசும் போது தெரிவித்ததாவது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அனைத்து மகளிரும் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா விடியல் பயணம், உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் கல்லுாரி மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினி திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்திட்டம், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில் உங்களுடன் ஸ்டாலின், மக்களின் நலனை காக்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம், முதியோர்களுக்கான அன்புச்சோலை திட்டம், உயர்கல்வி செல்லும் மாணவ மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டம், உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் வாரியத்தின் மூலம் மாநகராட்சி, நகராட்சி. பேரூராட்சி, ஊராட்சி, மருத்துவமனைகள், அரசு பள்ளிகள்/ விடுதிகள், மயானம், குப்பை கிடங்கு ஆகிய பகுதிகளில் பணிபுரியும் 7,114 தற்காலிக தூய்மை பணியாளர்களை வாரியத்தில் இணைத்து அவர்களுக்கு அடையாள அட்டை(Smart Card) வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2 நபர்களுக்கு திருமணம் உதவித்தொகை ரூ.10,000 மற்றும் 1 நபர்க்கு மாதம் ரூ.1,000 வீதம் ஓய்வூதிய உதவித்தொகையாக ரூ.26,000/-, 7 நபர்களுக்கு ரூ.42,000/ மகப்பேறு உதவித்தொகை, 11 நபர்களுக்கு ரூ.32.75 இலட்சம் மதிப்பீட்டிலும் இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் நிவாரண நிதியுதவித்தொகை, 113 நபர்களுக்கு ரூ.2.12 இலட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை என மொத்தம் 134 நபர்களுக்கு ரூ.35.65 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இன்றைய தினம், மாண்புமிகு வீட்டு வசதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் 1 பயனாளிக்கு ரூ.5,000 திருமண உதவித்தொகை, 25 நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ரூ.41,000 கல்வித்தொகை, 1 நபருக்கு ரூ.10,000 ஓய்வூதியம், 95 நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை என மொத்தம் 122 பயனாளிகளுக்கு ரூ.56,000/ -மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் தமிழ்நாடு துாய்மை பணியாளர் நல வாரிய துணைத்தலைவர் கனிமொழி பத்மநாபன், இந்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு கவுன்சில்/ தேசிய தலைவர் சாம் பிரகாஷ், தமிழ்நாடு துாய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் மோகன், மண்டலக்குழுத்தலைவர்கள் சுப்பிரமணி, சசிகுமார், தாட்கோ மேலாளர் முருகவேல் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
%20(1).jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)