ஈரோடு மாவட்டம், சித்தோடு, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பயிலும் 129 மாணவியர்களுக்கு ரூ.6.14 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் நேற்று (10.01.2026) வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி மாணவ மாணவியர்களின் நலனுக்காக அவர்களின் நலன் மேல் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பள்ளி குழந்தைகள் சோர்வின்றி படித்திட காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி அதன் மூலம் மாணவ, மாணவியர்களின் வருகை அதிகரித்துள்ளதுடன், அவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதும் அதிகரித்துள்ளது. மேலும், அரசு பள்ளியில் படித்து 12 வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவ மாணவியர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைபெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் உயர்கல்விக்கு செல்லும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்க நான் முதல்வன் திட்டம், என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கிராமப்புற மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வருகிறார்கள்.
இன்றைய தினம், மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள், சித்தோடு, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு பயிலும் 129 மாணவியர்களுக்கு (தலா ரூ.4,900 வீதம்) ரூ.6,14,040/- மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இ.மான்விழி, சித்தோடு பேரூராட்சி தலைவர் கண்ணகி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி முன்னாள் மாணவர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
%20(1).jpg)