ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நேற்று (03.01.2026) நடைபெற்ற “காபி வித் கலெக்டர்“நிகழ்ச்சியில் கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் முன்னாள் இசை பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் கலந்துரையாடினார்.
இன்றைய தினம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் “காபி வித் கலெக்டர்“ நிகழ்ச்சியில் பேசும் போது தெரிவித்ததாவது,
முன்னாள் இசை பள்ளி மாணவ, மாணவியர்கள் இசைப்பள்ளியில் குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் தவில், நாதசுரம் மற்றும் தேவாரம் ஆகிய கலைகள் கற்று தேர்ச்சி பெற்று கர்நாடக இசைக் கச்சேரிகள், நாதசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரிந்து வருகின்றனர். தேவாரம் பாடுதல் மற்றும் கோவில்களில் ஓதுவாராகவும், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.
மேலும், அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களை பெறுவதற்கு அனைத்து வகையான கலைஞர்களும், நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெற வேண்டும். மேலும் உறுப்பினர்களுக்கு ஏதேனும் தொழில் செய்ய விரும்பினால் வங்கி கடனுதவி பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பு முகாம்கள் நடத்துவதன் மூலம் கலைஞர்களை நல வாரியத்தில் பதிவு செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வருகின்ற தமிழர் திருநாளாம் தை திருநாளில் கிராமிய கலைஞர்கள் கலை நிகழ்ச்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இசைப்பள்ளி தலையாசிரியர் என்.ரவிராஜ் உட்பட முன்னாள் இசைப்பள்ளி மாணவர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
%20(2).jpg)
%20(1).jpg)