Type Here to Get Search Results !

மூன்று நாள் இலவச ஆரி மற்றும் எம்பிராய்டரி தொழில் திறன் பயிற்சி வகுப்புகள் ........




ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டாரத்தைச் சேர்ந்த தொழில் தொடங்க ஆர்வமுள்ள நபர்களுக்கான சிறப்பு முயற்சியாக, மாநில திட்டக் குழுவின் நிதியுதவியுடன் ஈரோடு மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் 
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII–TN) இணைந்து செயல்படுத்தும் வளமிகு வட்டாரங்கள் வளர்ச்சித் திட்டம் (FBDP) மூலம் 6.01.2026 முதல் 8.01.2026 வரை மூன்று நாள் இலவச ஆரி மற்றும் எம்பிராய்டரி தொழில் திறன் பயிற்சி வகுப்புகள் நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.


இந்த பயிற்சி நிகழ்ச்சியை செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO), நம்பியூர் அவர்கள் தொடங்கி வைத்து, பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டும் வழிமுறைகள் மற்றும் அரசு வழங்கும் தொழில் சார்ந்த திட்டங்களைப் பயன்படுத்தி பொருளாதார முன்னேற்றம் அடையலாம் என விளக்கினார்.

மூன்று நாள் பயிற்சியில் ஆரி மற்றும் எம்பிராய்டரி கைவினைத் தொழிலில் வடிவமைப்பு, தையல் நுட்பங்கள், வடிவ அலங்காரம் மற்றும் நேரடி செய்முறை பயிற்சிகள் ஆகியவை பயிற்றுநர் திருமதி ருக்மணி அவர்களால் வழங்கப்பட்டன. பயிற்சியில் கலந்து கொண்ட பயனாளர்கள் நேரடியாக தயாரிப்புகளை செய்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.
மேலும், தினேஷ் குமார், உதவி பொறியாளர், மாவட்ட தொழில் மையம், ஈரோடு அவர்கள் கலந்து கொண்டு, வங்கி கடன் பெறும் நடைமுறைகள், பிரதம மந்திரி முத்ரா யோஜனா உள்ளிட்ட அரசு கடன் மற்றும் மானியத் திட்டங்கள், திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து பயனாளர்களுக்கு விரிவாக விளக்கினார்.

பயிற்சியின் மூன்றாம் நாள் நிறைவு விழாவில், பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அரசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், பயிற்சி பைகள் மற்றும் பயிற்சி கிட்கள் (Training Kit) வழங்கப்பட்டன.  மாலதி மற்றும்  கலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டு, பயிற்சி பெற்றவர்களை ஊக்குவித்து வாழ்த்துரை வழங்கினர்.

பயிற்சியில் கலந்து கொண்ட பயனாளர்களுக்கு எதிர்காலத்தில் வங்கி நிதி உதவி மற்றும் அரசு மானியம் பெறுவதற்கான முன்னுரிமையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த பயிற்சி திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாடுகளை முனைவர் க. சசி குமார், மாவட்ட திட்ட மேலாளர், EDII–TN, ஈரோடு அவர்கள் சிறப்பாக மேற்கொண்டார். இப்பயிற்சி பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கான உறுதியான அடித்தளமாக அமைந்ததாக கலந்து கொண்ட பயனாளர்கள் தெரிவித்தனர்.








Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.