Type Here to Get Search Results !

“உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் தொடர்ச்சியாக ஈரோட்டில் கலெக்டர் மடிக்கணினிகளை வழங்கினார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக மடிக்கணினிகள் வழங்கும் "உலகம் உங்கள் கையில்" திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து நேற்று  (05.01.2026) ஈரோடு மாவட்டம், சித்தோடு அரசினர் பொறியியல் கல்லுாரியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிபொறுப்பேற்ற பிறகு மாணவ, மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டினை முன் மாதிரி மாநிலமாக உயர்த்தி உள்ளார்கள். அந்த வகையில் காணொலி காட்சி வாயிலாக உலகம் உங்கள் கையில் திட்டத்தில் கீழ் 10 லட்சம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை  நேற்று துவக்கி வைத்தார்.


அதன்படி,  இன்றைய  தினம்  மாவட்ட  ஆட்சித்தலைவர்  அவர்கள்  ஈரோடு 
மாவட்டத்திற்கு, 7279 மடிக்கணினிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் கல்லுாரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு முதற்கட்டமாக சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாளவாடி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு 61 மடிக்கணினிகளும், மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு 247 மடிக்கணினிகளும், நம்பியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு 250 மடிக்கணினிகளும், சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு 274 மடிக்கணினிகளும் என மொத்தம் 832 விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சிகளில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம்,
மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) மலர்விழி, சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திருக்குமரன், சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் சாரதா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.