ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தமங்கலம், தொப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் (06.01.2026) நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கொத்தமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் புங்கம், மகோகனி, நாவல், மகிழம், என பல்வேறு வகையான மரக்கன்றுகள் சாலையோரங்களில் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நாற்றுப்பண்னை அமைக்கப்பட்டு 20,000 நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள நாற்றுகளின் வகைகள், நாற்றுகளின் வளர்ச்சி, அவற்றின் பராமரிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கொத்தமங்கலம் ஊராட்சி முதல் உப்புப்பாளையம் வரை சாலையில் புதியதாக தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு சாலையின் தரம், நீளம், அகலம் மற்றும் தடிமன் குறித்தும், சாலை அமைக்க பயன்படுத்தப்பட்ட கற்களின் அளவு மற்றும் மூலப்பொருட்களின் தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தொப்பம்பாளையம், உதவி சுகாதார மைய கட்டிட கட்டுமான பணிகள் குறித்து பார்வையிட்டு, ஒப்பந்த விபரம், பணி காலம், அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதி விபரம், கட்டிட வரைப்படம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, தொட்டம்பாளையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டு உணவின் சுவை, தரம் குறித்து மாணவ மாணவியர்களிடம் கலந்துரையாடினார்.
முன்னதாக 107, பவானிசாகர், சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் உதவி வாக்காளர் பதிவு அலுவலரின் விசாரணை நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
%20(1).jpg)
%20(1).jpg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)