Type Here to Get Search Results !

குறள்வாரம் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட அறிவிப்பு ......


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வோர் ஆண்டும் குறள்வாரம் கொண்டாடப்பட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவ்வறிவிப்பினை செயல்படுத்திடும் பொருட்டு 2026 ஆம் ஆண்டில் சனவரி திங்களில் குறள் வாரவிழாவினை நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று குறளாசிரியர் மாநாடு நடத்தத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 15 ஆசிரியர்கள் (அரசு / அரசு உதவிபெறும் / அங்கீகரிக்கப்பட்ட அனைத்துவகை தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரிபவர்கள்), 15 அரசு ஊழியர்கள் (அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துத்துறை / அனைத்துநிலை அலுவலர்கள் /ஊழியர்கள்) இம்மாநாட்டில் கலந்து கொள்ளலாம். 15 ஆசிரியர்கள் மற்றும் 15 அரசு ஊழியர்களைத் தேர்வுசெய்வதற்கான எழுத்துத்தேர்வு ஈரோடு மாவட்டத்தில் 09.01.2026ஆம் நாளன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 02.00 மணிக்கு ஈரோடு அரசு மாதிரி பெண்கள் மேனிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் தேர்வு தொடங்க ஒரு மணி நேரத்திற்கு முன்பு வருகைபுரிய வேண்டும். தேர்வுஎழுத விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள துலங்கல் குறியீடு (QRCode) வழியாகப் பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்யாதவர்கள் தேர்வுமையத்திற்கு நேரடியாக வந்து பதிவுசெய்து தேர்வில் கலந்துகொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.







Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.